Showing posts with label poetry. Show all posts
Showing posts with label poetry. Show all posts

Monday, 22 August 2016

யார் அவள்?

கனவுகளை சுமந்து ...
எல்லைகளை கடந்து...
வியர்வை துளிகளை உரமாக்கி...
புதியதோர் பாதையை உருவாக்கி...
தடைகளை துரும்பென உதைத்து...
துயரங்களை ஒரு குறுநகையுள் புதைத்து...
இலட்சியத்தை மட்டுமே தன் எதிரில் கண்டு...
ஒரு பெண்ணால் எதுவும் முடியும் என்று...
புதுவிடியலை தேடி பறவையாய்  பறந்தாள் அந்த சூரியனை நோக்கி...
சூரியனின் கதிர்கள் சுட்டெரித்தாலும்  மீண்டும் எழுவாள் அந்த சாம்பலில் இருந்து...
        ஒரு பீனிக்ஸ் பறவையாய் !!
காற்றடித்தவுடன் அணையும் விளக்கல்ல அவள் ...
பூமிக்கடியில் சினம்கொண்டு  ஓடும் தீக்குழம்பு அவள்...
                                             அவள் பெண் !
                                                                     - ப்ரணவி ஜெய்

Monday, 7 September 2015

முதல் காதல்...

எல்லைகள்  நிர்நியிக்க   முடியாத
        திசைகளை   கடந்த   காற்றாய்  உலாவினேன்
உன்  விழிகளில்  விழும்  வரை ...

விழிகள்   பேசத்  தொடங்கின
       சிந்தை  தன்  சுயத்தை  இழந்தது
'நான்'  'நீ'  ஆனேன் ...

இரு   இதயம்   பினைந்தது
       நிகழ்காலம்  வசந்தமானது !
எதிர்காலம்   சொப்பனமானது !

உனக்காக  உருகினேன்
            என்னை  உணர  தவறினேன்
'காதல்'  என்ற  ஓநாய்க்கு
            என்  கணவை  இரையாக்கினேன் !

நாட்கள்  கடந்தன 
         பூந்தோட்டமாய்  இருந்த  நினைவுகள்
முட்படுக்கை   ஆனது ...

காலத்தை  பின்  செலுத்தமுடியாமல் ...
      தொலைந்துபோன  கணவை மீட்கமுடியாமல் ...
முதற்காதலை   மறக்க  முடியாமல் ...
         இதயத்தின்   வலிகளை  வாழ்கையின்  வடுக்களாய்   ஏற்று   நிற்கிறேன் !!!


Monday, 23 February 2015

சுதந்திரம்...!!!



படர்ந்து கிடக்கும் நீல வானின் கீழ்
தான் யார் என்பதை மறந்து
இரும்பு கம்பிகளினுள் தன் கணவுகளை புதைத்து
படபடக்க வேண்டிய சிறகினுள் தன் ஆசையை மறைத்து
சுயநலம் பிடித்த மக்களின் கைப்பாவையாய்
தன் பிறவியின் நோக்கத்தை துலைத்து
அறியாமையில் அவர்களின் கைப்பாவையாய் இருக்கும் கிளியே!
பிறர் வந்து வாங்கிக் கொடுக்க அது பழம் அல்ல...சுதந்திரம்!
விழித்துக்கொள் கிளியே! நீ பாதுகாப்பாய் அல்ல சிறைபட்டு இருக்கிறாய்.!