எல்லைகளை கடந்து...
வியர்வை துளிகளை உரமாக்கி...
புதியதோர் பாதையை உருவாக்கி...
தடைகளை துரும்பென உதைத்து...
துயரங்களை ஒரு குறுநகையுள் புதைத்து...
இலட்சியத்தை மட்டுமே தன் எதிரில் கண்டு...
ஒரு பெண்ணால் எதுவும் முடியும் என்று...
புதுவிடியலை தேடி பறவையாய் பறந்தாள் அந்த சூரியனை நோக்கி...
சூரியனின் கதிர்கள் சுட்டெரித்தாலும் மீண்டும் எழுவாள் அந்த சாம்பலில் இருந்து...
ஒரு பீனிக்ஸ் பறவையாய் !!
காற்றடித்தவுடன் அணையும் விளக்கல்ல அவள் ...
பூமிக்கடியில் சினம்கொண்டு ஓடும் தீக்குழம்பு அவள்...
அவள் பெண் !
- ப்ரணவி ஜெய்