எல்லைகள் நிர்நியிக்க முடியாத
திசைகளை கடந்த காற்றாய் உலாவினேன்
உன் விழிகளில் விழும் வரை ...
விழிகள் பேசத் தொடங்கின
சிந்தை தன் சுயத்தை இழந்தது
'நான்' 'நீ' ஆனேன் ...
இரு இதயம் பினைந்தது
நிகழ்காலம் வசந்தமானது !
எதிர்காலம் சொப்பனமானது !
உனக்காக உருகினேன்
என்னை உணர தவறினேன்
'காதல்' என்ற ஓநாய்க்கு
என் கணவை இரையாக்கினேன் !
நாட்கள் கடந்தன
பூந்தோட்டமாய் இருந்த நினைவுகள்
முட்படுக்கை ஆனது ...
காலத்தை பின் செலுத்தமுடியாமல் ...
தொலைந்துபோன கணவை மீட்கமுடியாமல் ...
முதற்காதலை மறக்க முடியாமல் ...
இதயத்தின் வலிகளை வாழ்கையின் வடுக்களாய் ஏற்று நிற்கிறேன் !!!
No comments:
Post a Comment